மும்பையில் மின் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு..!
மும்பையில் மின் வினியோகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல இடங்களில் மின்சாரம் தடைபட்டது. கல்வா பகுதியில் உள்ள டாடா நிறுவனத்தின் மின் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மும்பையில் பல இடங்களில் மின்சாரம் தடைபட்டது.
இதனால் ஜூகு, மிரேரி, அந்தோரா, நவி மும்பை, தானே பார்வையிட்ட பகுதிகளில் மின்சாரம் இன்றி பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் மும்பை புறநகர் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
அதே நேரம் மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களை பயன்படுத்துவதால் இதுவரை எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் விநியோக தொகுப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே மின்சாரம் தடைபட்டதாகவும் சிரமங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் மும்பை மாநகராட்சி கூறியுள்ளது.






