--- --:--:-- --

சுதந்திர தின விழாவை கொண்டாடிவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிய மாணவிக்கு நேர்ந்த சோகம்..!

5

சுதந்திர தின விழாவை கொண்டாடிவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிய பொழுது மாணவியின் மாநகர பேருந்து மோதியதில் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை குரோம்பேட்டையில் உள்ள பள்ளியில் பயின்ற மாணவி ஒருவர் பள்ளியில் சுதந்திர தின விழாவை கொண்டாடிவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

 

அப்போது பேருந்து பள்ளி மாணவியின் தலை மீது ஏறி இறங்கியது. சம்பவ இடத்திலேயே இதில் சிறுமி பலியானார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் தப்பி ஓடிய பேருந்து ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon