அப்துல்கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று..!
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு இதே நாளில் அப்துல் கலாம் காலமானார். இன்று அவரது ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில் ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள அப்துல் கலாம் நினைவிடம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நினைவு தினத்தன்று இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்துல் கலாமின் நினைவிடத்தில் அவரது குடும்ப உறுப்பினர்கள் காலை 9 மணிமுதல் 10 மணிவரை சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட உள்ளனர்.
மக்களின் ஜனாதிபதி என்று கொண்டாடப்பட்ட முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. மாணவர்களால் எப்போதும் கொண்டாடப்பட்ட கலாமின் நினைவலைகள் 1999இல் பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகர் பதவிக்கு பிறகு ஒரு லட்சம் மாணவர்களை சந்தித்து உரையாட வேண்டும் என்று அவர் இலக்கு வைத்து இருந்தார்.
நான் அவர்களிடம் உரையாடி அவர்களின் மனதில் லட்சியத்தை விதைப்பதை தன் வாழ்நாள் முழுவதும் முக்கிய கடமையாக செய்த அப்துல் கலாம் தன்னை ஒரு நல்ல ஆசிரியராகயாகவும் நினைத்ததால் மிகவும் கவுரவம் அடைந்ததாக தெரிவித்தார். விஞ்ஞானி குடியரசுத் தலைவர் போன்ற அடையாளங்களை விட மாணவர்களுக்கு ஒரு ஆசிரியராக இருப்பதையே பெரிதும் விரும்பினார்.
இராமேஸ்வரத்தில் எளிய மீனவ குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம் இஸ்ரோவின் செயற்கைக்கோள் தயாரிப்பில் முக்கிய பங்காற்றினார். உலகையே திரும்பிப் பார்க்க வைத்த பொக்ரான் அணு ஆயுத சோதனைக்கு முக்கிய காரணமாக அமைந்தவர் கலாம்.
ஏவுகணை நாயகன் என அழைக்கப்பட்ட கலாமுக்கு பத்மபூஷன், பத்மவிபூஷன், பாரத ரத்னா போன்ற உயரிய விருதுகளை வழங்கி அப்துல் கலாமை மேலும் சிறப்பித்துள்ளது. அரசின் இறுதி மூச்சு வரை இளம் தலைமுறையினரின் முன்னேற்றத்திற்காக சிந்தித்து அப்துல்கலாம் இளைஞர்களால் நாடு வல்லரசாகும் வலிமை பெறும் என்று உறுதியாக நம்பினார்.







