--- --:--:-- --

திருப்பூர் புதிய போலீஸ் கமிஷனராக கார்த்திகேயன் பொறுப்பேற்பு…!கொடி கட்டிப் பறக்கும் கஞ்சா, கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை, பாலியல் தொழிலை கட்டுப்படுத்துவாரா?

b87b97b3-9327-4d88-a288-083985b9dff6

திருப்பூர் மாநகர புதிய போலீஸ் கமிஷனராக கார்த்திகேயன் இன்று பொறுப்பேற்றார்.திருப்பூரில் கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை உள்ளிட்ட பல்வேறு சவால்களை முறியடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 

தமிழகம் முழுவதும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு 34 உயர் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில், திருப்பூர் போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார், சென்னை தொழில் நுட்பப் பிரிவு ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டு கோவை சரக டி.ஐ.ஜி.,யாக இருந்த கார்த்திகேயன், ஐ.ஜி.,யாக பதவி உயர்வு பெற்று, திருப்பூர் மாநகர கமிஷனராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இன்று அவர் திருப்பூரில் கமிஷனராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

 

1970-ம் ஆண்டு பிறந்த கார்த்திகேயன், பொது நிர்வாகத்துறையில் எம்.ஏவும், மேலாண்மைப் பிரிவில் முதுகலைப் படிப்பும், சட்டமும் பயின்றுள்ளார். 1995-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் சேர்ந்தார். போளூர், வந்தவாசி, அவிநாசி, மதுராந்தகத்தில் டி.எஸ்.பியாக பணியாற்றி உள்ளார். திருவள்ளூரில் ஏடிஎஸ்பியாகவும், ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்திற்கு 2003 -ம் ஆண்டு எஸ்பியாகவும் பணிபுரிந்துள்ளார்.

கொடி கட்டிப் பறக்கும் கஞ்சா, மது விற்பனை
கொடி கட்டிப் பறக்கும் கஞ்சா, மது விற்பனை

தற்போது திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றுக்கொண்ட கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தொழில் நகரமான திருப்பூரில் பொதுமக்கள்-போலீஸ் நல்லுறவு பேணிக் காக்கப்படும். சட்டம் ஒழுங்கு காக்கப்படும் என தெரிவித்தார்.

சவால்கள் என்ன?

 திருப்பூரில்  கொடி கட்டிப் பறக்கும் கஞ்சா, கள்ள மார்க்கெட்டில் விற்பனையாகும்  ‘மது’வால் லட்சக்கணக்கான அன்றாட கூலி பெறும் தொழிலாளர்களின் தினசரி வருமானம் பறிபோகிறது. அதுவும் அரசு மதுபானக் கடைகளிலேயே பார்களில் 24 மணி நேரமும் திருட்டுத்தனமாக நடைபெறும் மது விற்பனை நடைபெறுகிறது.

மேலும் மசாஜ் சென்டர்கள் என்ற பெயரில் பாலியல் தொழிலும் அமோகமாக நடைபெறுவதை அறவே ஒழிக்க வேண்டும் என்பது போன்ற சவால்களை புதிய போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் சாதிக்க வேண்டும் என அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply

Right Menu Icon