--- --:--:-- --

வருகிற 6 ஆம் தேதி முதல் ஜூலை மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இலவசம்..!

14

பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதையடுத்து தமிழகத்தில் இந்த மாதமும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கொரொனா கட்டுப்படுத்துவதற்காக இந்த மாதம் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

எனவே இதனைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம்பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல், மே ஜூன் மாதங்களில் வழங்கிய அளவின்படி கூடுதல் அரிசியுடன் நியாய விலை கடைகளில் இலவசமாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

 

வருகிற 6 ஆம் தேதி முதல் ஒன்பதாம் தேதி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் நியாயவிலை கடைகளுக்கு சென்று பொருட்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வருகிற 10-ஆம் தேதி முதல் இந்த பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. தடை செய்யப்பட்ட பகுதிகளில் வீடுகளுக்கு நேரடியாக சென்று இந்த பொருட்கள் வழங்கப்படும் என்று அரசு கூறியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon