--- --:--:-- --

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வினாத்தாள் மாற்றம்..!

1

ந்த ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம் கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 

நாட்டின் 62வது குடியரசு தினத்தையொட்டி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தலைமையகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியுள்ளார்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர் குறைவான காலகட்டத்தில் மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராவதால் அதனை கருத்தில் கொண்டு வினாத்தாள் வடிவமைப்பை வாங்கலாமா அல்லது எந்த மாதிரியான மாற்றங்களை கொண்டு வரலாம் என்பது குறித்த கருத்துக்கள் கேட்கப்பட்டு வருவதாக கூறினார். கருத்துக்கள் பெறப்பட்ட பின் முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 

9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பதற்கு 98 சதவீத பெற்றோர் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon