டிக் டாக் செயலி மீண்டும் அமெரிக்காவில் தொடர்ந்து செயல்பட அனுமதி..!
சீனாவின் டிக் டாக் செயலி அமெரிக்காவில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கும் ஒப்பந்தத்தை ஆதரிப்பதாக அந்த நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் டிக் டாக் செயலியின் தலைமை நிறுவனமான பைடான்ஸ் மற்றும் வால்மார்ட் ஆகியவை இணைந்து ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்க அவர் கேட்டுக்கொண்டார்.
இதன் மூலம் டிக் டாக் நிறுவனங்கள் மற்றும் வால்மார்ட், ஆரக்கிள் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
இந்த இரு நிறுவனங்களும் இணைந்து உலகளவில் டிக்டாக்கில் பங்கில் 53 விழுக்காட்டினை வைத்து இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 10 கோடி அமெரிக்கர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.






