--- --:--:-- --

கடன் தொல்லை தாங்காமல் தாயும், மகளும் செய்த காரியம்..!

5

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடன் தொல்லை தாங்காமல் கணவர் தலைமறைவாகி விட அவரது மனைவியும் மகளும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.

 

அணைக்கட்டு சாலையில் மளிகை கடை நடத்தி வந்த சரவண பிரசாத் என்பவருக்கு வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டு கடன் தொல்லை அதிகரிக்கவே சில தினங்களுக்கு முன்பு யாரிடமும் சொல்லாமல் தலைமறைவானதாக கூறப்படுகிறது.

 

பிரசாத்தின் வீட்டிற்கு சென்ற கடன்காரர்கள் அவரது மனைவி புஷ்பா ராணியிடம் பணம் கேட்டு தொல்லை செய்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் பதினேழு வயது மகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon