--- --:--:-- --

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இடியுடன் கூடிய கோடை மழைக்கு வாய்ப்பு !

5

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் அடுத்து வரும் 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும்.

 

இதனையொட்டி தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1ஆம் தேதியை ஒட்டி துவங்குவதற்கான சாதகமான சூழ்நிலை தற்போது நிலவியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்தது.

 

அதிகபட்சமாக குமரிமாவட்டம் கீழ் கோதையாறில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அடுத்து வரும் 24 மணி நேரத்தை பொருத்தவரையில் நெல்லை, குமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதியில் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழையும் பெய்ய கூடும்.

 

வெப்பநிலையை பொருத்தவரை வேலூர், ராணிப்பேட்டை, திருத்தணி மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் அதிக பட்ச வெப்ப நிலையாக 41 டிகிரி செல்சியஸ் பதிவாகும். நாளை முதல் ஜூன் 4ஆம் தேதி வரை மீனவர்கள் அரபிக்கடலின் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon