--- --:--:-- --

தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்..!

11

ளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தி குறிப்பில் தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வறட்சி நிலவுவதால் 13ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் வட தமிழக மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

 

சென்னையில் இரு நாட்களுக்கு வானம் ஓரளவுமேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் இதனிடையே மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இரு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon