--- --:--:-- --

வேலூரில் 98 ஆயிரம் பேருக்கு கொரொனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது..!

10

கொரொனா பரவல் அதிகரித்து வருவதால் நேதாஜி மார்க்கெட்டை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் கொரொனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 மாதங்களுக்குப் பிறகு அதிகரித்துள்ளது.

 

இந்நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் சண்முகம் தலைமையில் இன்று நடைபெற்றது. ஒரு மாதத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்துள்ளதாகவும் மாவட்டம் முழுவதும் சுமார் 98 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.

 

மார்க்கெட் மூலமாக பரவுவதை தடுக்க வேலூர் நேதாஜி மார்க்கெட்டை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நேதாஜி மார்க்கெட்டில் உள்ள சில்லறை வணிக கடைகள், மாங்காய் மண்டி மைதானத்திற்கு மாற்றப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.

 

Leave a Reply

Right Menu Icon