--- --:--:-- --

தவெக எம்எல்ஏ இளையராஜாவுக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு

02

த்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவின் வெற்றியை எதிர்த்து தொகுதி வாக்காளர் கீதா சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார். மனு கோரிக்கையில், இளையராஜாவுக்கு பதில் வேறு ஒருவர் பெயர் இடம் பெற்றிருந்ததால், திருத்த மனுவை தாக்கல் செய்ய மனுதாரர் கீதா தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 

 

இதற்கிடையில், தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ இளையராஜா மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ இளையராஜா தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி தவெக எம்.எல் ஏ இளையராஜா தாக்கல் செய்த மனுவை ஏற்று, தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon