--- --:--:-- --

கொரொனா கட்டுப்பாடுகள் மூலம் பலன் கிடைக்காவிடில் இரவு நேர பொது முடக்கம்..!

12

ற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள கொரொனா கட்டுப்பாடுகள் மூலம் பலன் கிடைக்காவிடில் பொதுமுடக்கம் மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

கொரொனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது கோயம்பேடு உட்பட அனைத்து பெரிய காய்கறி சந்தைகளில் சில்லறை வியாபாரக் கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் கொரொனாவை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமருடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மூலம் பலன் கிடைக்காது.

 

இரவு நேர பொதுமுடக்கம் மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மார்ச் 16 ஆம் தேதி முதல் இதுவரை கட்டுப்பாடு விதிமுறைகளை மீறியதாக ஒரு லட்சத்து 36 ஆயிரம் பேர் கண்டறியப்பட்டு அவர்களிடத்தில் இருந்து 2 கோடியே 88 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்க பட்டிருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் இதுவரை 31 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு முதல் தவணையும், இரண்டாவது தவணையாக 3 லட்சத்து 61 ஆயிரம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடத்தப்படும் என்றும் அப்போது சுகாதாரப் பணியாளர்கள் முன் களப்பணியாளர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 100% தடுப்பூசி போடப்படும் எனவும் தமிழக அரசு கூறியுள்ளது

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon