--- --:--:-- --

மூன்று ஆண்டுகள் சிறை.. சினிமா திருட்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி..!

7

புதிய திரைப்படங்கள் திருட்டை தடுக்க ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் திருட்டுத்தனமாக திரைப்படங்களை திருடி எடுப்போருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 

புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக பிரதி எடுத்து வெளியிடுவதால் சினிமா துறைக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்கவும் திரைப்பட தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் மாற்றம் செய்யவும் முடிவு செய்யப்பட்டு இதற்காக கடுமையான விதிகளுடன் ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது.

 

இந்த மசோதா மாநிலங்களவையில் நேற்று வெளியிடப்பட்டது. திருட்டுத்தனமாக பிரதி எடுப்பவர்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை மற்றும் அதன் திரைப்படத்தை தயாரிக்கும் செலவில் 5 சதவீதம் வரை அபராதம் விதிக்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது.

 

மேலும் திரைப்படங்களுக்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் சான்றிதழ் வழங்கும் பொழுது அதை வயது வாரியாக ua7, ua 13 பிரிவுகளாக வழங்கும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 

Right Menu Icon