--- --:--:-- --

பெட்ரோல் போட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்ற கார்..!

8

திருவண்ணாமலை மாவட்டம் இளங்காடு பகுதியில் காருக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் தப்பிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

இளங்காடு கூட்ட சாலை அருகே பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த நிலையில் இரவு நேரத்தில் ஆந்திர மாநிலம் பதிவு கொண்ட காரில் வந்த நபர் டீசல் நிரப்பி விட்டு பணம் தராமல் திடீர் என மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

 

இந்த சம்பவம் தொடர்பாக பெட்ரோல் பங்க் மேலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Right Menu Icon