--- --:--:-- --

இன்ஸ்டாவில் சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டல்.. இளைஞரை பிடித்த சைபர் கிரைம் போலீசார்..!

3

சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய புகாரில் இளைஞரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மூன்று பேரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

புதுச்சேரியை சேர்ந்த 11 ஆம் வகுப்பு படித்து இன்ஸ்டாகிராம் மூலம் நட்பாக பழகி வந்த நபர் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்பி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் சைபர் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

 

இதன் பேரில் மதுரையை சேர்ந்த அசரப் அலி என்பவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிறுமியின் பெற்றோரை மிரட்டிய புகாரில் அஷ்ரப் அலியின் பெற்றோர் அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

Right Menu Icon