கொல்கத்தாவில் மீண்டும் தொடங்கிய மருத்துவர்கள் போராட்டம்..!
கொல்கத்தாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவர் ஒருவரை உயிரிழந்த நோயாளியின் உறவினர்கள் தாக்கியதால் மருத்துவர்கள் போராட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது.
பணியிடத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் முன்வைத்து மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர்கள் இன்று முதல் மீண்டும் முழு பணி புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் பயிற்சி மருத்துவர்கள் சங்கங்கள் மேற்கொண்ட எட்டு மணி நேர ஆலோசனைக்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையின் பாதுகாப்பு மருந்து உட்கட்டமைப்பு விதிகளை மேம்படுத்துதல் மருத்துவர்களை அச்சுறுத்தும் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். பத்து அம்ச கோரிக்கையை முன்வைத்து மீண்டும் நடை பயிற்சி மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர்கள் இன்றிலிருந்து முழுமையாக பணி புறக்கணிப்பீடு உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து மருத்துவமனையில் அச்சமற்ற படிப்புகள் குறித்தும் அரசு தரப்பில் இருந்து தெளிவாக நடவடிக்கைகளை எடுக்கப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






