--- --:--:-- --

திருவாடானை ஒன்றிய பகுதிகளில்… துப்புரவு பணியாளர்களுக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்கள்…!

IMG-20200503-WA0246

கொரோனா வைரஸ் தொற்றின்போது தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் சமூக அக்கறையுடன் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு, தங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மாவட்ட கழகச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதோடு, தாங்கள் செய்துள்ள பணிகள் குறித்தும் கொரோனா தொற்றின் களநிலவரம் குறித்தும் அவ்வப்போது தொலைபேசியில் கேட்டறிந்து வருகிறார்.

 

அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் திமுக சார்பில், பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று திமுக மாவட்ட கழக சார்பில், திருவாடானை ஒன்றியத்துக்குட்பட்ட ஒரிக்கோட்டை,டி.நாகனி,குஞ்சங்குளம், சிறுமலைகோட்டை உள்ளிட்ட ஊராட்சிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் தலைமையில், திருவாடானை ஒன்றியக்குழு தலைவர் முகம்மது முக்தார் ஏற்பாட்டில்,10 கிலோ அரிசி பை, காய்கறி பொருட்களை வழங்கினார்.

 

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள், ரவி, மாவட்ட இளைஞரணி அணி துணை அமைப்பாளர் கார்த்திகேயன், ஒன்றிய கவுன்சிலர் அருணாச்சலம், ஊராட்சி மன்ற தலைவர்கள் மகாலிங்கம், கவிதா காந்தி, இந்திரா ராஜேந்திரன், பஞ்சு ஆறுமுகம். வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் முன்னதாக பேசிய மாவட்டச் செயலாளர் முத்துராமலிங்கம்:- உயிரைக் கொள்ளும் நோய் தொற்று பற்றி கவலைப்படாமல் இரவும் பகலும் பாடுபடும் துப்புரவு பணியாளர்களின் பாதம் தொட்டு நன்றி தெரிவிப்பதாகவும், அவர்களது பணிக்கு சிறு உதவியாக நிவாரண பொருட்கள் வழங்குவதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon