அரசு அலுவலகம் அருகே மூடப்படாத ஆழ்துளை கிணறு – அதிகாரிகள் தூக்கம் கலையுமா?
திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் மூடப்படாமல் உள்ள ஆழ்துளை கிணறு உள்ளது. இதை மூட நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடனையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் பின்புறம் ஆழ்துளை கிணறு ஒன்று அமைக்கப்பட்டு, பயன்பாடின்றி , மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளது.
ஆபத்தான ஆழ்துழை கிணறுகளை மூட அரசு நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், அரசு அலுவலகமான திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் உள்ள ஆழ்துளை கிணறு மூடப்படாதது, அதிகாரிகளின் அலட்சியப் போக்கை காட்டுவதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
விபத்து நேரிடும் முன்பாக, அரசு அதிகாரிகள் தூக்கம் கலைத்து, இந்த அழ்துளை கிணற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாகும்.





