முதல்வரிடம் காலால் நிவாரண நிதி அளித்த மாற்று திறனாளி!
மஹா புயல் நிவாரண நிதி அளிக்க வந்த மாற்றுத்திறனாளி இளைஞர் முதல்வரிடம் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் ஆலத்துறையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெயிண்டர் ஆன இளைஞர் பிரணவ் மஹா புயல் நிவாரண நிதி அளிப்பதற்காக கேரள முதலமைச்சரை நேரில் சந்தித்தார்.
கைகளை இழந்த பிரவீனிடம் நிவாரண நிதியை பெற்றுக்கொண்ட பினராயி விஜயன் அவரது காலை பிடித்து குலுக்கி நன்றி பாராட்டினார்.
மேலும் அந்த இளைஞரின் ஆசைக்கு இணங்க அவருடன் பினராயி விஜயன் செல்பியும் எடுத்துக் கொண்டார். காலால் இளைஞர் எடுத்துக்கொண்ட செல்பி இணையத்தில் வைரலாகி வருகிறது.





