--- --:--:-- --

கர்நாடகாவில் சாலை விபத்தில் 10 தமிழர்கள் உட்பட 13 பேர் பலி

7

கர்நாடகாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சிக்கனபள்ளி கிராமத்தை சேர்ந்த மஞ்சுநாத் தனது குடும்பத்தினர் 12 பேருடன் காரில் கர்நாடக மாநிலத்திற்கு சுற்றுலா சென்றார்.

 

தர்மஸ்தாலா உள்ள கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு நள்ளிரவு அவர்கள் ஓசூர் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் பூளிகள் என்ற இடத்தில் அதிகாலை இரண்டு முப்பது மணிக்கு கார் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மைய தடுப்பில் மோதி கவிழ்ந்தது.

 

இந்த விபத்தில் கார் ஓட்டுனர் ராஜேந்திரன் உட்பட 4 ஆண்களும், 5 பெண்களும், ஒரு வயது பெண் குழந்தையும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனுடைய விபத்துக்குள்ளான கார் மீது மற்றொரு கார் மோதியதில் பெங்களூரை சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.

Leave a Reply

Right Menu Icon