சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி அவதூறு பரப்புகின்றனர்
தெலுங்கு திரையுலகை சேர்ந்த இருவர் கீழ்த்தரமான பதிவுகள் மூலம் தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவதாக நடிகை ஸ்ரீ ரெட்டி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
வளசரவாக்கத்தில் வசித்து வரும் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி நடிகர்கள் பலர் மீது பாலியல் புகார்களை கூறி பிரபலமானவர்.
இவர் தற்போது அளித்துள்ள மனுவில் தெலுங்கு துணை நடிகையான கராத்தே கல்யாணி என்பவரும் நடன இயக்குனர் ராகேஷ் என்பவரும் சேர்ந்து பொது வெளியிலும், சமூக வலைதளங்களிலும் தம்மைக் குறித்து அவதூறாகவும், மிகவும் கீழ் தனமாகவும் வதந்திகளை பரப்பி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். எனவே அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது மனுவில் ஸ்ரீ ரெட்டி கேட்டுக்கொண்டுள்ளார்.



