பேனா சின்னத்தால் எந்தவித பாதிப்பும் இல்லை அமைச்சர் – மா.சுப்பிரமணியன்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவுச் சின்னமாக பேனாவை கடலில் வைப்பதற்கு மீனவர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மீனவ பொதுமக்கள் யாரும் பேனா சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மெரினாவில் வசிக்கும் மீனவர்களுக்கு நடப்பது என்னவென்று தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் காரணங்களுக்காகவே சிலர் நினைவுச் சின்னத்தை எதிர்க்கின்றனர் எனக் கூறியுள்ளார்.





