--- --:--:-- --

விமான வடிவத்தில் வீடு கட்டிய கட்டட தொழிலாளி..!

2

ம்போடியா நாட்டில் ஒருவர் தனது வீட்டை விமான வடிவில் கட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். கிராஸ்போர்டு என்ற அந்த கட்டுமான தொழிலாளி 30 ஆண்டுகளாக உழைத்து சேமித்த தொகையை கொண்டு விமான வீட்டை கட்டியுள்ளார்.

 

இரண்டு படுக்கை அறைகள் கொண்ட இந்த வீடு 20 மீட்டர் நீளமும், நான்கு மீட்டர் அகலமும் கொண்டு கட்டப்பட்டுள்ளது. விமான பயணத்தின் மீதான ஆசை காரணமாக விமானம் போன்ற வடிவத்தில் வீட்டை கட்டி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

இந்த வீட்டை சுற்றுலாத்தலமாகவும் மாற்றியுள்ள அவர் உள்நாட்டு நபர்களிடம் 40 ரூபாயும் வெளிநாட்டு பயணிகளுடன் 80 ரூபாயும் தொலைவு கட்டணமாக வசூலிக்கிறார்.

 

Right Menu Icon