உலகின் மிகப்பெரிய வெடிகுண்டு நீருக்கடியில் வெடித்து சிதறியது..!
இரண்டாம் உலகப்போரில் ஜெர்மன் போர்க்கப்பலை அழிப்பதற்காக தயாரான உலகிலேயே மிகப்பெரிய வெடிகுண்டு போலந்து நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. 5 ஆயிரத்து 400 கிலோ எடை கொண்ட அந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்த போது வெடித்து சிதறியது.
இரண்டாம் உலகப்போரின்போது 1945 ஆம் ஆண்டு பிரிட்டனின் ராயல் விமானப் படையினர் ஜெர்மன் போர்க்கப்பலான லூட்சேவை அளிக்கும் நோக்கத்தில் 6 மீட்டர் நீளம் 2400 கிலோ எடை கொண்ட மிகப் பெரிய வெடி குண்டை வீசினர்.இந்த வெடிகுண்டில் 2400 கிலோ அளவுக்கு வெடிபொருள் நிரப்பப்பட்டிருந்தது.
ஆனால் பிக் பாய் என்று பெயரிடப்பட்ட இந்த வெடிகுண்டு வெடித்து சிதறவில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு ஜெர்மன் போலந்து எல்லையில் உள்ள கால்வாயில் கடந்தாண்டு இந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. சிணுஜ்லி நகரில் இயற்கை எரிவாயு முறையும் அமைந்துள்ளது.
வெடிகுண்டை செயலிழக்க செய்யும் போது வெடித்து சிதறினால் மிகப்பெரிய அளவிற்கு அசம்பாவிதம் ஏற்படும் என்பதால் பிஎஸ்ட் கால்வாயில் வெடிகுண்டை நீருக்கடியில் செயலிழக்கச் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதற்காக இரண்டரை கிலோ கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்து அங்கு வசித்து வந்த 750 க்கும் மேற்பட்டோர் அப்புறப்படுத்தப்பட்டனர்.
வெடிகுண்டை கால்வாய் நீரில் மூழ்கிய படி செயலிழக்கச் செய்ய கடற்படை வீரர்கள் முயன்றனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் வெடிகுண்டு வெடித்து சிதறியது. நல்லவேளையாக இந்த வெடி விபத்தில் கடற்படை வீரர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் தப்பினார்.







