--- --:--:-- --

முரளிதரன் வாழ்க்கை திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்பு..!

4.1

முத்தையா முரளிதரன் ஆக விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஷேம் ஆன் விஜய் சேதுபதி ட்விட்டரில் டிரெண்ட்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை எண்ணூர் எனும் பெயரில் திரைப்படமாகிறது.

 

இந்த படத்தில் விஜயசேதுபதி நடிப்பதற்கு ஆரம்பத்தில் இருந்தே பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதில் இலங்கைக் கொடியை கொண்ட சீருடையை அணிந்து இருப்பதை குறிப்பிட்டு விஜய் சேதுபதியை விமர்சித்து வருகின்றனர்.

 

இதனால் ஷேம் ஆன் விஜய் சேதுபதி என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது.

 

Leave a Reply

Right Menu Icon