அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் அறுவை சிகிச்சை செய்தபின் வெளியே வந்த கம்பி..!
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் அறுவை சிகிச்சை செய்தபின் நடமாட முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
காட்டுநாயக்கன் பாளையத்தை சேர்ந்த பானுமதிக்கு விபத்தில் வலது காலில் முறிவு ஏற்பட்டதால் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு கம்பி பொருத்தப்பட்டது. இதன் பின்னர் சுமார் மூன்று மாதத்திற்கு பெண்ணின் காலில் பொருத்தப்பட்ட கம்பி வெளியே வந்துள்ளதால் எழுந்து நடமாட முடியாமல் வலியால் தவித்துள்ளார்.
மீண்டும் மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததால் வீட்டிற்குள்ளேயே முடங்கி வெளியே செல்ல முடியாமல் வேதனையில் வாடும் அந்த பெண் தனக்கு உரிய சிகிச்சை அளித்து மீண்டும் இயல்பு வாழ்க்கையை நடத்த உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.






