ரவுடி ஷங்கர் என்கவுண்டர் வழக்கு : சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய மனு..!
சென்னையில் ரவுடி ஷங்கர் என்கவுண்டர் வழக்கை சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அயனாவரத்தை சேர்ந்த போலிசார் அவரை பிடிக்க சென்ற காவலர்களை தாக்கியதாக கூறி சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கை அயனாவரம் காவல் நிலையத்தில் இருந்து சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரி அவரது தாயார் கோவிந்தம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சங்கரின் உடலை இரண்டாவது உடற்கூறு ஆய்வு செய்யவும் கூறியிருக்கிறார்.
நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாஜிஸ்திரேட் விசாரணைக்கு பின் அவரது முன்னிலையில் தான் உடற்கூறு ஆய்வு செய்யப் பட்டதாகவும் உடலை வாங்க குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மறுநாள் ஒப்படைக்கப்பட்டதாகவும் அரசு வழக்கறிஞர் கூறினார்.
மறு உடற்கூறாய்வு கோரிக்கை குறித்து அரசிடம் விளக்கம் பெற அவர் அவகாசம் கோரினார். இதையடுத்து வழக்கு பற்றி தமிழக அரசும் காவல்துறையும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வரும் 1ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.






