வெளியே தெரியுமாறு அமைக்கப்பட்டுள்ள ரயில் கழிப்பறையின் ஜன்னல்..!
சென்னையை சேர்ந்தவர் சைலேஷ். இவர் கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். சமீபத்தில் இவர் தனது மனைவியோடு சென்னை எக்மோரில் இருந்து ஹைதராபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றுள்ளார். அப்பொழுது ரயில் கழிப்பறையின் நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து சைலேஷ் ஒரு பத்திரிக்கையில் பேசியுள்ளார் அப்பொழுது நள்ளிரவு ஒரு மணி அளவில் ரயில் நிலையத்தில் வண்டி நின்றது எனக்கு தூக்கம் வரவில்லை என்று வெளியே வந்தேன். அந்த சமயத்தில்ரயில் கழிவறையில் ஜன்னல் வழியாக பிளாட்பார்மில் இருந்து பார்த்தால் தெள்ளத் தெளிவாக உள்ளே இருக்கும் விஷயங்கள் தெரியவந்தது.
அதை பார்த்து அதிர்ந்து போய்விட்டேன். அதில் ஒட்டப்படும் கருப்பு கூலிங் பேப்பர் அகற்றப்பட்டிருந்தது. அங்குள்ள டிடிஆர்ரிடம் முறையிட்டதற்கு மிக அலட்சியமாக ஆன்லைனில் புகார் தெரிவிக்கவும் எனக்கூறினார். பின் ஆன்லைனில் புகாரை தெரிவித்தேன். ஆனால் 10 நாட்கள் ஆகியும் எந்த பதிலும் எனக்கு அளிக்கப்படவில்லை.
எனக்கு மிகுந்த மன உளைச்சலாக இருந்தது. பல பெண்கள், குழந்தைகள் உட்பட அந்த கழிவறையை பயன்படுத்தி வருகிறார்கள். இவ்வளவு அலட்சியமாக ரயில்வே நிர்வாகம் உள்ளது. பின்னர் பயணம் செய்த பொழுது எடுக்கப்பட்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டேன். அது மிகவும் வைரலானது. இதனால் திடீரென உங்கள் புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று எனக்கு கடிதம் வந்தது என குறிப்பிட்டுள்ளார்.





