பெற்றோரை கொல்ல கூலிப்படையை ஏவிய மகன்..!
ஆந்திராவில் சொத்து பிரச்சனைக்காக பெற்றோரை கொல்ல கூலிப்படையை ஏவிய மகன் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணா.
இவரு தனது சொத்து முழுவதையும் அவர் இரண்டு மகன்களுக்கு பிரித்துக் கொடுத்து விடுவதாக கூறப்படும் நிலையில் அண்ணனின் சொத்தை அடைய தம்பி நாராயணா சதி திட்டம் தீட்டியதாக தெரிகிறது. இதற்கு தந்தை, தாய் மற்றும் அண்ணன் தடையாக இருப்பதாக கூறி அவர்களை கொல்ல தம்பி கூலிப்படையை நாடியதாக தெரிகிறது.
திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கூலிப்படையை சேர்ந்த ஷேக்கிடம் போலீசார் விசாரணை நடத்திய பொழுது சொத்து பிரச்சினைக்காக நாராயணா பெற்றோரை கொல்ல திட்டமிட்டிருந்தது அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மகன் உட்பட ஐந்து பேரை கைது செய்தனர்.





