வயிற்று வலியால் துடித்த மனைவி.. காப்பாற்ற தவித்த கணவன்.. கடைசியில் நேர்ந்த துயரம்..!
அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் பெண் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெண்ணை வயிற்று வலி காரணமாக அவரது கணவர் வில்லியனூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.
அங்கு மருத்துவர்கள் இல்லாத நிலையில் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கேட்டுள்ளார். ஆம்புலன்ஸ் ஓட்டுனர் இல்லை என கூறி காலம் கடத்தியதால் வள்ளி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.





