எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவது துரோகம்: உதயநிதி
திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில், மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா. இந்த சோபா மாடல் ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-வது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் எம்.எல்.ஏக்கள் விலைக்கு வாங்குவது தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம். தொட மாட்டேன் – தொட்டா விட மாட்டேன் என்று ஸ்கிரிப்ட்படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த சீனில், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்? சோஃபா மாடல் அரசின் இந்த வாஷிங் மெஷின் அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. திணிக்கப்படும் இடைத் தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள என்று பதிவிட்டுள்ளார்.





