எம்.ஆர். விஜயபாஸ்கர் ராஜினாமா – முதலமைச்சருக்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி
தொட மாட்டேன் – தொட்டா விட மாட்டேன் என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மூன்றாம் இடம் பிடித்த நிலையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து ராஜினாமா செய்துவருவது தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் இருந்து மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கட்சியில் இருந்தும் விலகினார். இவர் விரைவில் தவெகவில் இணைய இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா. இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம். “தொட மாட்டேன் – தொட்டா விட மாட்டேன்” என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்?
SofaModel அரசின் இந்த Washing Machine அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது. திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” எனத் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.





