--- --:--:-- --

44 கோடி.. ஐக்கிய அரபு அமீரகத்தில் டிரைவருக்கு அடித்த ஜாக்பாட்..!

1

க்கிய அரபு அமீரகத்தில் ஓட்டுநராக பணிபுரியும் இந்தியருக்கு லாட்டரியில் 44 கோடி பரிசு கிடைத்துள்ளது. ஓட்டுனராக பணிபுரிந்து வந்த நிலையில் கிடைத்த சம்பளம் போதாமல் பணம் ஈட்ட வேறு வழிகளை தேடியுள்ளார்.

 

அதன்மூலம் லாட்டரி திட்டம் மூலம் நண்பர்களுடன் இணைந்து லாட்டரி சீட்டுகளை வாங்க ஆரம்பித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் தவறாமல் லாட்டரி சீட்டு வாங்கிய நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 33ஆம் தேதி அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 44 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது.

 

எனக்கு பரிசு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை என பெரோஸ் குறிப்பிட்டுள்ளார். நண்பர்களின் பங்களிப்புடன் லாட்டரி சீட்டு வாங்கியவர் தனது கிடைக்கவிருக்கும் பணத்தை 30 பேருடன் பகிரவுள்ளதாக கூறப்படுகிறது.

 

இதே போல அபுதாபியை சேர்ந்த சுதீஷ்குமார் குமரேசன் என்பவருக்கு கடந்த டிசம்பர் மாதம் லாட்டரியில் இரண்டு கோடி ரூபாய் பரிசு கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon