--- --:--:-- --

மதுரையில் அங்கன்வாடி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து..!

9

துரையில் அங்கன்வாடி உணவுப்பொருள் சேமிப்பு அறையின் மேற்கூற இடிந்து விழுந்து இரண்டு வயது குழந்தை உட்பட 2 பேர் காயமடைந்தனர். மதுரை முத்துப்பட்டி பகுதியில் உள்ள வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது.

 

இங்கு படித்தவரும் குழந்தைகளுக்கு உணவு தயாரிப்பதற்கான பொருட்கள் அருகே உள்ள தனி அறையில் வைக்கப்பட்டிருந்தது. அங்கன்வாடிக்கு நேற்று ஆசிரியர் வராததால் உணவு தயாரிக்கும் முனியம்மாள் என்பவர் குழந்தைகளை உணவு பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

 

அப்போது அறையின் காங்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்ததில் முனியம்மாள் மற்றும் பவனிகா ஸ்ரீ என்ற இரண்டு வயது குழந்தைக்கு படுகாயம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் 5 குழந்தைகளுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon