--- --:--:-- --

விவகாரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவிக்கு கத்தி குத்து..!

6

விவாகரத்து கோரி நோட்டீஸ் அனுப்பிய மனைவியை கணவர் கத்தியால் குத்திய சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நிகழ்ந்துள்ளது. திருமலை புரத்தைச் சேர்ந்த சதீஸ், ஜோதிக்கு 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

 

குடும்ப தகராறு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்த நிலையில் ஜோஷி விவாகரத்து கோரி கணவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் மனைவி பணிபுரிந்து வரும் நிறுவனத்திற்கு சென்று அவருடன் தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்தியுள்ளார்.

 

பின்னரே அங்குள்ளவர்கள் அவரை பிடித்து சரமாரியாகத் தாக்கி காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர். இதில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave a Reply

Right Menu Icon