--- --:--:-- --

பெண்ணை கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கிராம மக்கள்

156048602765753

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என்பதற்காக அவரை மின் கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியதாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநகர் மாவட்டம் கொடி கெஹள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜம்மா என்பவரை ஊர் மக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்தனர்.

 

அவரை அவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். ராஜம்மா உணவகம் நடத்துவதற்காக பலரிடம் 12 லட்சம் வரை கடன் பெற்று இருக்கிறார். நஷ்டம் காரணமாக கடனை திரும்பி செலுத்த முடியவில்லை. இதனால் தலை மறைவானார் ராஜம்மா.

 

இந்நிலையில் தர்மசலாவில் இருந்த ராஜம்மாவை வலுக்கட்டாயமாக அழைத்து வந்த ஊர் மக்கள் சிலர் அவரை கம்பத்தில் தாக்கினர். இது தொடர்பாக 7பேரை கைது செய்துள்ள போலீசார் தொடர்புடைய மற்றவர்களையும் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon