--- --:--:-- --

இன்று பிற்பகல் நீட் நுழைவுத் தேர்வு..!

1

ளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு இன்று பிற்பகல் நடைபெறுகிறது.இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளில் தேர்வு நடைபெறும் நிலையில், மாணவர்கள் பிற்பகல் 1.30 மணிக்குள் தேர்வு அறைகளில் இருக்க வேண்டும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. புகைப்படம் ஒட்டப்பட்ட ஹால் டிக்கெட், ஆதார் அல்லது வேறு ஏதாவது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஒளிபுகும் தண்ணீர் bottle மட்டுமே மாணவர்கள் எடுத்து வரலாம்.

 

பேனா, பேப்பர், பென்சில் பாக்ஸ் மற்றும் கைபேசி, ப்ளூடூத் உள்ளிட்ட கருவிகள் பெல்ட், தொப்பி, பை, வாட்ச், அணிகலன்கள் உள்ளிட்ட எவைகளுக்கும் அனுமதி இல்லை. மாணவர்கள் அரைக் கை ஆடைகள், ஸ்லிப்பர், Low heel செருப்பு மட்டுமே அணிந்து வர வேண்டும்.

 

பல இடங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வர்கள் ஆவணங்களை பத்திரமாக எடுத்து வர தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது. இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் தலா 180 மதிப்பெண்கள் வீதம் 720 மதிப்பெண்களுக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon