--- --:--:-- --

சைன் போர்டில் புஷ்ஷப் செய்து இளைஞர் வெளியிட்ட வீடியோ..!

6

ணைய உலகம் பலவித அற்புதங்களை கண்முன்னே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகம். இங்கு பல வித விஷயங்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்கிறோம். இங்கு பதியப்படும் செய்திகளும், வீடியோக்களும் பல செய்திகளை வழங்குகின்றன.

 

நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இருக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. அதுபோல தற்பொழுது வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

 

அந்த வீடியோவில் ஒரு நபர் சாலையில் உள்ள சைன் போர்டுக்கு மேல் புஷ்ஷப் செய்வதை காண முடிகிறது. உடற்பயிற்சி கூடம், பூங்கா அல்லது காளி மைதானங்களில் நாம் உடற்பயிற்சி செய்வதை பார்த்திருப்போம். ஆனால் இந்த வீடியோவில் காணப்படும் நபர் சாலை இருக்கும் பொழுது சைன் போர்டு மீது ஏறி புஷ்ஷப் செய்ய தொடங்குகிறார்.

 

இதை தொடர்ந்து அந்த வழியாக சென்றவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி அவரை பார்க்கத் தொடங்குகிறார்கள். ஆனால் அவர் இதையெல்லாம் கண்டும் கலங்காமல் புஷ்ஷப் செய்து கொண்டே இருக்கிறார்.

 

அவ்வாறு செய்வது எவ்வளவு ஆபத்தானது என்பதை வீடியோவில் பார்த்து புரிந்து கொள்ள முடிகிறது. இப்படிப்பட்ட நேரங்களில் ஒரு சிறு கவனக்குறைவு கூட உயிருக்கு ஆபத்தாகலாம்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon