டிரைவரை போலவே ஆக்ஷன் கொடுத்த சிறுவனின் வீடியோ வைரல்..!
கேரளாவில் ஓடும் பேருந்தில் ஓட்டுநரை போலவே செய்கை செய்த சிறுவனின் காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பேருந்து முன் பக்கம் அமர்ந்திருந்த சிறுவன் ஓட்டுநரை போல கைகளை அசைத்து தானும் பேருந்து இயக்குவது போல் செய்கை செய்து கொண்டிருந்தான். பேருந்து பயணி ஒருவர் இந்த காட்சிகளை படப்பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.





