வானில் ஒரே வாரத்தில் நான்காவது தற்காப்பு தாக்குதல் நடத்திய அமெரிக்கா..!
அமெரிக்க வான்வெளியில் மீண்டும் ஒரு மர்ம பொருள் அந்நாட்டு ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. ஒரே வாரத்தில் இது நான்காவது சம்பவம் என கூறப்படுகிறது. பிப்ரவரி நான்காம் தேதி சீன உளவு பலூன் ஒன்று அமெரிக்க ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
அந்த பலூன் தங்கள் நாட்டின் மீதான வானிலை ஆய்வுக்காக தனியார் நிறுவனம் அனுப்பியது. திசை மாறி அமெரிக்க வான்வெளிக்குள் வந்துவிட்டது என்று சீனா விளக்கம் அளித்தது. அதை ஏற்க மறுத்த அமெரிக்கா உளவு பலூன் கடலின் மீது பறந்த பொழுது சுட்டு வீழ்த்தியது.
ஜோபைடன் உத்தரவின் பேரில் 16 விமானம் மூலம் இந்த மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது. தொடர்ந்து 16ஆம் தேதி அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தின் மீது 40 ஆயிரம் அடி உயரத்தில் ஏதோ மர்ம பொருள் ஒன்று பறக்க அதையும் அந்நாட்டு ராணுவம் ஜெட் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





