இரண்டு குழந்தைகளும் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு..!
தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே இரண்டு குழந்தைகளும் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர். காட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் மனைவிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
மனமுடைந்த மனைவி இரு தினங்களுக்கு முன் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கிறார். இந்நிலையில் லட்சுமியின் உறவினர் அவரை பல இடங்களில் தேடிய பொழுது அங்கிருந்த கிணற்றில் மூவரும் சடலமாக மீட்கப்பட்டனர். விரைந்து வந்த காவல்துறையினர் 3 சடலங்களை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





