இடி தாக்கியதில் உறங்கிக் கொண்டிருந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பலி..!
திருப்பத்தூர் அருகே வீட்டின் மீது இடி தாக்கியதில் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறுவன் சிவா ஆறாம் வகுப்பு படித்து வந்தான்.
சிவாவின் பெற்றோர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் தாய் மாமன் வெங்கடாச்சலம் அரவணைப்பில் வளர்ந்து வந்த நிலையில் நேற்று இரவு அறையில் இருந்து பயங்கர சத்தத்துடன் இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இடி தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





