--- --:--:-- --

மழை நீர் தேங்கிய பள்ளத்தில் விழுந்து 8 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு..!

2

தேனி மாவட்டத்தில் மழை நீர் தேங்கிய பள்ளத்தில் விழுந்து 8 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில் வசிக்கும் ரங்கநாதனின் பேத்தி ஹாசினி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்துள்ளார்.

 

அங்கு பேரூராட்சி சார்பில் போர் அமைக்க தோண்டப்பட்ட 5 அடி ஆழ பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளார். மழைநீர் தேங்கி இருந்தால் சிறுமி மூழ்கியுள்ளார். பின்னர் மகனை மீட்ட தாயார் சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொழுது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon