--- --:--:-- --

திருச்செந்தூர் – தூத்துக்குடி இடையே முடங்கிய பேருந்துகளை இயக்கி சோதனை..!

3

னமழையால் தொடச்சென்று தூத்துக்குடி இடையே பேருந்து சேவை நான்கு நாட்களாக முடங்கியுள்ள நிலையில் இரண்டு பேருந்துகளை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது.

 

கனமழையின் காரணமாக திருச்செந்தூரிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் பல இடங்களில் சேதம் ஏற்பட்டு வெள்ள நீர் தேங்கி நின்றது. இதனால் நான்கு நாட்களாக பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தன.

 

குறிப்பாக ஆத்தூரில் பாலத்திற்கு மேல் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் தற்போது வெள்ள நீரானது படிந்துள்ளதால் வழக்கம் போல் ஆறுமுகநேரி, ஆத்தூர், பழைய காயல் வழித்தடங்களில் பேருந்துகள் செல்ல சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதன்படி இரண்டு பேருந்துகளை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon