--- --:--:-- --

பரோட்டா சாப்பிட்டு தூங்க சென்ற இளைஞர்.. காலையில் உயிரிழந்து கிடந்த சோகம்..!

4

கோவையில் காய்ச்சலின் பொழுது பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவர் திடீர் மாரடைப்பாடு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்திவிட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து திருப்பூரைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் என்ற மாணவர் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்தார்.

 

அதே பகுதியில் தனது நண்பர்கள் 4 பேருடன் அரை எடுத்து தங்கி நிலையில் அவருக்கு காய்ச்சலால் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்குள்ள ஹோட்டலில் பரோட்டா வாங்கி சாப்பிட்டுள்ளார்.

 

பின்னர் வழக்கம் போல் தனது அறையில் தூங்கச் சென்றுள்ளார். ஆனால் காலை அசைவின்றி கிடந்த ஹேமச்சந்திரனை நண்பர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஹேமச்சந்திரன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இது குறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அதிக காய்ச்சல் இருந்த பொழுது ஹேமச்சந்திரன் பரோட்டா சாப்பிட்ட ஒவ்வாமையால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon