--- --:--:-- --

ஜங்ஷனில் நின்ற ரயில்.. பெண்ணின் தங்க சங்கிலியை பறித்த இருவர் ..!

6

டலூர் மாவட்டம் திருப்பாதிரிப்பூர் ரயில் நிலையத்தில் ரயில் இருக்கும் பொழுது பயணியின் தாலியை பறித்துச் சென்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

 

பெருங்குளத்தூரை சேர்ந்த ராதிகா என்பவர் தனது குடும்பத்தினருடன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கடந்த 6ம் தேதி தாம்பரத்தில் இருந்து கும்பகோணத்திற்கு புறப்பட்டு சென்றார்.

 

இந்த ரயில் அதிகாலை 3:30 மணியளவில் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்ற பொழுது ராதிகாவின் கழுத்தில் இருந்த தாலிச் சங்கலியை மர்ம நபர் ஒருவர் பறித்துக் கொண்டு ஓடி விட்டார். ராதிகா அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட ரயில்வே போலீசார் சிசிடிவி உதவியால் 2 பேரை கைது செய்தனர்.

 

Right Menu Icon