இறந்தவரின் உடலை டோலி கட்டிக் கொண்டு மலை பாதையில் தூக்கி சென்ற அவலம்..!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மலை கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் 7 கிலோமீட்டர் தூரம் நடந்தே மருத்துவமனைக்கு சென்ற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
இறந்தவரின் உடலை கரடு முரடான மலை பாதையில் உறவினர்கள் டோலி கட்டி தூக்கி சென்ற அவலமும் நிகழ்ந்துயுள்ளது. மலைக் கிராமத்தை சேர்ந்த முதியவர் கோவிந்தனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் 7 கிலோமீட்டர் தூர கரடு முரடான மழை பாதையில் நடந்தே வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
மருத்துவமனை வாசலிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதனை அறிந்து அங்கு சென்ற உறவினர்கள் கோவிந்தனின் உடலை கொண்டு செல்லவும் சாலை வசதி இல்லாததால் வாகனங்கள் வர மறுத்த நிலையில் நள்ளிரவில் டோலி கட்டிக்கொண்டு முதியவரின் உடலை சுமந்து செல்ல முடிவெடுத்துள்ளனர்.
அதிகாரத்தில் டார்ச் லைட் அடித்தும் தீபந்தம் வைத்தும் சடங்குகளை செய்த உறவினர்கள் 7 கிலோமீட்டர் தூரம் உள்ள மலை பாதையில் கோவிந்தனின் உடலை டோலி கட்டி சுமந்து சென்றுள்ளனர். கிராமத்திற்கு சாலை வசதி செய்து தரப்படவில்லை என அவர்கள் வேதனையுடன் கூறி உள்ளனர்.





