கருணாநிதியிடம் இருந்த சமூகநீதி உணர்வு ஸ்டாலினுக்கு இல்லை : அன்புமணி ராமதாஸ்
கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் சாதிவாதி கணக்கெடுப்பு நடந்துள்ள பொழுதும் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயங்குவது ஏன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சோழமண்டல சமையல் சமுதாய நல்லிணக்க மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ராமதாஸ் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும் நீதிமன்றங்கள் தலையிடாது என்றும் கூறினார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி. சமூக நீதிக்காக பல விஷயங்களை செய்ததாக சுட்டிக்காட்டினார். ஆனால் அவரைப் போன்ற உணர்வு முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை என்றும் அன்புமணி விமர்சித்தார்





