நண்பரின் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து வைத்து மிரட்டிய நபர்..!
கரூர் அடுத்த தில்லை நகரை சேர்ந்தவர் 29 வயதான கற்பகம். இவர் தனது மாமியார் மற்றும் தனது மூன்று குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அந்த பெண்ணிடம் தில்லை நகரில் கணவர் அருண்குமார் மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். தனது கணவர் வேலை விஷயமாக வேலை வெளியே சென்று இருந்தார். இந்நிலையில் கணவரின் நண்பர் கமல் என்பவர் வீட்டிற்கு வந்த பொழுது அவர் வந்தது தெரியாமல் நான் குளித்துக் கொண்டிருந்தேன்.
அப்பொழுது எனக்கு தெரியாமல் நான் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து விட்டார். பிறகு அந்த வீடியோவை காட்டி மிரட்டி பணம் கேட்டார். பணம் கொடுக்கவில்லை என்றால் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாக மிரட்டினார். மேலும் இதை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி தொடர்ந்து பணம் பறித்து வந்தார்.
நான் பயந்து பல்வேறு இடங்களில் கடன் வாங்கி அவருக்கு பணம் கொடுத்து வந்தேன். நாளடைவில் அவரது தொல்லை அதிகமானது. பணம் கேட்டு மிரட்டி வந்தார். இந்த விஷயம் வெளியே தெரியக்கூடாது என வீட்டிற்கு தெரியாமல் பலரிடம் கடன் வாங்கி சுமார் 50,000 வரை பணம் கொடுத்துள்ளேன். மீண்டும் மீண்டும் வீடியோவை வைத்து மிரட்டி பணம் கேட்டு வருகிறார் என குற்றம் சாட்டியுள்ளார்.





